எம்எல்ஏ ஒருவர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடியை விமர்சனம் செய்து டுவிட் செய்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணிக்கு அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் அளித்த விளக்கத்தில் குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மேவானி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
மேவானி எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதை கண்டித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.