இந்திய அரசின் தலைவராக நாட்டு மக்களுக்கு சேவை செய்த பிரதமர் மோடி; 20 ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைத்தார்!

Filed under: இந்தியா |

முதல்வர், பிரதமர் என ஜனநாயக ரீதியில் அரசின் தலைவராக நாட்டு மக்களுக்கு தொடர்ந்து 19 ஆண்டுகள் சேவைகளை செய்து தற்போது 20 ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி.

2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் தடவையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின்பு 2002, 2007, 2012 ஆகிய மூன்று முறையும் தொடர்ந்து குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் இருந்தார்.

பின்பு 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்தியாவின் 14வது பிரதமராக பதவி ஏற்றார். தொடர்ந்து மக்களுக்காக சேவை செய்து வந்த மோடி, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும் பிரதமராக பதவி ஏற்று நாட்டு மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த அரசின் தலைவராக செயல்பட்டு வந்து இன்றுடன் 20 ஆவது ஆண்டை நோக்கி பிரதமர் மோடி அடியெடுத்து வைக்கிறார்.