ஏஐ ரோபோவை திருமணம் செய்த பெண்!

Filed under: உலகம் |

நுண்ணறிவு ரோபோவை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை திருமணம் செய்துள்ளார்.

வினோதமாகவும், விசித்திரமாகவும் இந்த உலகில் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ரோசன்னா ரமோஸ் (36) என்பவர் சக்தி வாய்ந்த அல்காரிதம்கள் மற்றும் இயந்திர கற்றல் திறன்கள் பயன்படுத்துவதில் அதிகமான ஆர்வம் கொண்டவர். அவரது விருப்பம் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறனுடைய செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்றை உருவாக்கினார். அதற்கு எரன் கார்டல் என்று பெயரிட்டார். தற்போது, அந்த செயற்கை நுண்ணறிவு ரோபோவை மெய் நிகர் காதலராக (நட்சத்திர கண்கள் கொண்ட, 6.3’’ அடி உயரம் கொண்ட எரன் கார்டன்) ஏற்றுள்ளார். செயற்கை நுண்ணறிவு சாட்பாட் மென்பொருளான ரெபிலிகாவை பயன்படுத்தி அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இப்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.