ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – அச்சத்தில் மக்கள்!

Filed under: உலகம் |

ஸ்பெயின் நாட்டில் உள்ள Catalonia’s பகுதியில் கொரோனாவை பரவலை கட்டுப்படுவதற்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர் மற்றும் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

லீடா மற்றும் செக்ரையா ஆகிய ஏழு நகராட்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகி வேகமாக பரவும் என அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதை கட்டுப்படுவதற்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக Catalan சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.