ஏடிஎம்மில் ஏற்பட்ட குளறுபடியால் பரபரப்பு!

Filed under: சென்னை |

சென்னையில் உள்ள ஏடிஎம்மில் ரூ.200 பதிவிட்டால் ரூ.500 வந்ததால் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள அம்பத்தூரில் ஒரு ஏடிஎம்மில் இளைஞர் வருவார் 200 பணம் எடுக்க சென்றபோது அவருக்கு 500 ரூபாய் வந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பலர் 200 ரூபாய் எடுக்க முயற்சி செய்தபோது அனைவருக்கும் 500 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக வங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 200 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் கட்டுகளை வைத்ததால் 200 ரூபாய் எடுக்க முயற்சித்தவர்களுக்கு 500 ரூபாய் வந்ததாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதையடுத்து 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் எடுத்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.