ஏர்டெல் கட்டணம் மீண்டும் உயர்வா?

Filed under: உலகம் |

ஏர்டெல்லின் கட்டண உயர்வால் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏர்டெல், ஜியோ உள்பட முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பிரிபெய்டு கட்டணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் உயர்த்தியது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் மீண்டும் தனது கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் வருவாயை 200 ரூபாய் என நிர்ணயம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்வேறு விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் தற்போது பிரிபெய்டு கட்டணத்தையும் உயர்த்த உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது பயனாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.