1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த தாதா தாவூத் இப்ராஹிம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளி வருகிறது. தாவூத் இப்ராஹிமின் மனைவியும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கராச்சியில் உள்ள தாவூத் இப்ராஹிமின் வீட்டில் வேலைபார்ப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் முக்கிய அதிகாரி கூறினார் என சி.என்.என் செய்தி வெளியிட்டது.
தாவூத் இப்ராஹிம் மீது இந்தியாவில் பல வழக்கு உள்ளது. இவர் பாகிஸ்தானில் தங்கிருந்தாலும் அந்நாட்டு அரசு இல்லை என மாறுகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு தாவூத் இப்ராஹிம் சர்வதேச தீவிரவாதி என இந்தியா மற்றும் அமெரிக்கா அறிவித்தது.