ஐபிஎல் தொடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அமோக வெற்றி

Filed under: விளையாட்டு |

துபாய், அக் 1:
ஐபிஎல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 44வது போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134
ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் சென்னை அணி இத்தொடரின் முதலாவது அணியாக ஃப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதனால், சென்னை அணி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.