ஐபிஎல் போட்டி: நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயங்கும்!

Filed under: சென்னை,விளையாட்டு |

இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல்-2023 &16வது சீசன் தற்போது நடைபெறுகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். இம்முறை யார் கோப்பையைக் கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் எழுந்துள்ளது. அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கத்தில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் இன்று நள்ளிரவு 1 மணிவரை, 5 முதல் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.