சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார்.அவர் தன்னுடைய கணவரிடம் தான் “நான் ஐஸ்வர்யாவின் பினாமி” என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி இடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடமிருந்து நகைகள் ரொக்கம் மற்றும் நில பத்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஈஸ்வரிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்ற அவரது கணவர் கேட்ட கேள்விக்கு “நான் ஐஸ்வர்யாவின் பினாமி, அவருடைய சொத்துக்களை பாதுகாக்கிறேன். வெளியுலகத்துக்குத்தான் இது நமது வீடு ஆனால் உண்மையில் இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமானது” என்று அவர் கணவரிடம் திறமையாக பொய் கூறியுள்ளார் என்பது தற்போது விசாரணையில் தெரிவு வந்துள்ளது.