ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டியிடும் தொகுதி?

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஆந்திர மாநிலத்தில் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக 18வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள் நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் ஆந்திர மாநிலத்திற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிடுகிறார். ஆந்திராவில் ஆளுங்கட்சியாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வரும் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்கவுள்ளது. இதிலும் சகோதருக்கு எதிராக ஷர்மிளா தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் ஷர்மிளா போராட்டம் நடத்தி, எதிர்ப்பு அரசியல் செய்தார்.