கொரோனாவை எதிர்த்து போரிட நாம் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Filed under: இந்தியா |

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதைக் குறித்து அவரின் ட்விட்டர் செய்தியில்; கொரோனா வைரஸுக்கு எதிரான போர் மக்களைச் சார்ந்தது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் வலுவடைகிறார்கள்.

இந்தத் தொற்றிலிருந்து நமது மக்களை பாதுகாக்கும் வேலையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய கூட்டு முயற்சியால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தொற்றறை எதிர்த்து போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், அனைவரும் முக்கியமாக முக கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒன்றிணைந்து வெற்றியை பெற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.