ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96; டீசல் ரூ.93.26க்கு விற்பனை

Filed under: தமிழகம் |

சென்னை, செப் 24:
சென்னையில் இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல், 98.96 ரூபாய்க்கும், டீசல், 93.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் உள்ள கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

தொடர்ந்து, பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்து வருவதால், பொதுமக்கள், பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மக்களின் கவலையை போக்கும் விதமாக, தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால், சமீபத்தில் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. எனினும், அதன் விலை சாமானிய மக்களின் இன்னலை போக்கியதாக தெரியவில்லை.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல், 98.96 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல், 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில், பெட்ரோல் விலையில் இன்றும் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து 93.46 ரூபாய்க்கு விறபனை செய்யப்படுகிறது.