ஒரே நேரத்தில் கலெக்டர் பதவியை பெற்ற தம்பதியர்!

Filed under: தமிழகம் |

ஒரே நேரத்தில் கணவன் மனைவி இருவருக்கும் கலெக்டர் பதவி கிடைத்துள்ளது. இந்த தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நேற்றைய மாவட்ட கலெக்டர் இடமாற்றம் குறித்து அறிவிப்பில் ஐஏஎஸ் அதிகாரிகளான விஷ்ணு சந்திரன் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டராகவும் சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜித்தும் நியமனம் செய்து கொண்டனர். நேற்று நடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் விஷ்ணு மற்றும் ஆஷா ஆகிய கணவன் மனைவி இருவருமே பக்கத்து பக்கத்து மாவட்ட கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் விஷ்ணு நகராட்சி நிர்வாகத்துறையிலும் ஆஷா அஜித் வழிகாட்டு குழுவின் பொறுப்பு இயக்குனராகவும் பதவி வகித்தனர்.