ஒலிமாசை ஒலிப்போம்; பிரபல இயக்குனர் டுவிட்!

Filed under: சினிமா |

இயக்குனர் சிறுத்தை சிவா சினிமா ஷூட்டிங்கில் ஒலிமாசை ஒலிப்போம் என்று தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜீத்தின் “வீரம்”, “விவேகம்”, “வேதாளம்”, “விஸ்வாசம்” என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர். கடந்தாண்டு இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான “அண்ணாத்த” படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தையடுத்து, தற்போது சூர்யா -42 படத்தை இயக்குகிறார். இந்நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் வெளிப்புற ஸ்டூடியோ தளங்களில் சுற்றுசூழலுக்கு இணக்கமாக ஒலி மாசு அற்ற பகுதியாக மாற்ற நாம் உறுதி எடுப்போம். அதைச் சாத்தியப்படுத்த அதிக சத்தம் எழுப்பும் ஒலி எழுப்பிகளை படப்பிடிப்பு தளங்களில் தவிர்த்து படக்குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாமல் காப்போம். ஒலி மாசை ஒழிப்போம்” என பதிவிட்டுள்ளார்.