நீங்களும் டோனியை போல்தான்; சிவகார்த்திகேயனை புகழ்ந்த பிரபல இயக்குனர்!

Filed under: சினிமா |

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் டோனியின் ஓய்வு பற்றி பதிவிட்டது;
எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியதற்கும் மற்றும் மகிழ்வித்தமைக்கு உங்களுக்கு பெரிய நன்றி. நீங்கள் எப்போதுமே ஒரு அற்புதமான தலைவர். எங்களை ஆச்சரியப்படுத்த பல்வேறு உத்திகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய ஹெலிகாப்டர் ஷாட்களை பார்ப்பதற்கு காத்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டது; சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நீங்கள் பல பேருக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். டோனியை போல் புதிதாக வருபவர்களுக்கும் நண்பர்களுக்கும் பெரும்பாலும் வாய்ப்புகளை கொடுத்து வருகிறீர்கள். அடிமட்டத்தில் இருந்து நீங்கள் இருவரும் மலர்ந்தீர்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும், எம்.எஸ்.டோனியின் ஓய்வு பற்றி இயக்குனர் சீனுராமசாமி ட்விட்டரில் பதிவிட்டது;
ஒரு வீரனுக்கு விடை தரவே முடியாது,
மைதானத்தை விட்டு வெளியேறுவது என்பது வேறு
விளையாட்டை விட்டு வெளியேறுவது என்பது வேறு,
எப்போதும் கிரிக்கெட்டோடு இருங்கள்
இந்த தேசத்திற்கு கற்றுத்தாருங்கள்.
உங்கள் சாதனைகள் இளைய வீரர்களுக்கு பாடம்
எளியவர்கள் முயன்றால்
வெல்லலாம் என்கிற வேதம்.

இவ்வாறு இயக்குனர் சீனுராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.