ஓடிடியில் சாதனை; “வீரன்” திரைப்படம்!

Filed under: சினிமா |

ஹிப்பாப் ஆதி, “மரகத நாணயம்” திரைப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே. சரவன் இயக்கத்தில் “வீரன்” திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

ஹிப் ஹாப் ஆதிக்கு அவர் நடிப்பில் இதற்கு முன்பாக ரிலீசான படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. காமெடி பேண்டசி திரைப்படமான இத்திரைப்படம் ஜூன் 2ம் தேதி ரிலீசாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இப்போது படம் ரிலீசாகி ஒரு மாதமாகி தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. ஜூன் 30ம் தேதி முதல் “வீரன்” திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிவருகிறது. வெளியானதிலிருந்து பிரைம் வீடியோவில் “வீரன்” திரைப்படம் இந்தியளவில் டிரெண்ட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.