பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வரவேண்டும் என மூத்த இயக்குனர் பாரதிராஜா கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பாலு உனக்கு பொன்மாலைப்பொழுது கிடையாது பொன்காலை தான் வரணும். உனக்காக நான் மட்டுமில்ல உலகமே காத்து இருக்கிறது. உனக்காக அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
மேலும், நான் வணங்கும் பஞ்ச பூதங்கள் நிலம், நீர், காற்று, விண், வெளி உண்மை எனில் மீண்டும் நீ வர வேண்டும். மீண்டு வந்த ஆயிரக்கணக்கான பாடல்களைப் படவேண்டும். நீ ஆண் குயில். வந்துவிடுடா பாலு…