ஓபிஎஸ்ஸின் அதிரடி அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வரும் காலத்தில் இருவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் சூழ்நிலையில் திடீரென நேற்று டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்தித்து இருவரும் இணைந்து அதிமுகவின் மீட்போம் என தெரிவித்தார். “சசிகலாவையும் விரைவில் சந்திக்க உள்ளேன். சசிகலா வெளியூரில் இருப்பதால் அவர் சென்னை வந்தவுடன் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்” என ஓபிஎஸ் கூறியுள்ளார். ஓபிஎஸ், தினகரன் மற்றும் சசிகலா ஆகிய மூவரும் சேர்ந்த அதிமுக அணி எடப்பாடி பழனிச்சாமி அணியை விட வலுவாக இருக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.