ஓபிஎஸ் கட்சியின் நலனுக்காக பொறுமை காத்தோம், இனி பல ரகசியங்களை மக்களை சந்திக்கும் போது சொல்லப் போகிறோம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொது குழு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் அதில் பொதுக்குழு செல்லும் என்றும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சட்டபூர்வமாக அதிமுக சென்றுவிட்டது என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் கட்சி உடைய கூடாது என்று பொறுமை காத்தோம், ஆயிரம் இருக்கிறது வெளியே சொல்வதற்கு என்று ஒவ்வொன்றாக வெளியே வரும், மக்களை சந்திக்கும் போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம். கூவத்தூரில் என்ன நடந்ததோ அப்படி கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள், இது ஓபிஎஸ் தாத்தா அல்லது இபிஎஸ் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல தொண்டர்களுக்காக எம்ஜிஆர் தொடங்கிய கட்சி என்றும் கூறியுள்ளார்.