ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனும் திடீர் சந்திப்பு!

Filed under: அரசியல் |

அதிமுக கட்சியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பிரிவு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிரிவு என இரண்டாக பிரிந்துள்ளது. இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பிரிவில்தான் அதிக கட்சியினர் உள்ளனர். மேலும் அதிமுக அலுவலகம், இடைக்கால பொதுச்செயலாளர் போன்ற வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில் கிட்டத்தட்ட அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக ஒரு சில அதிரடி முடிவுகளை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முதல்கட்டமாக சென்னை அசோக் நகரில் அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சென்று அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் சில மணி நேரம் ரகசிய ஆலோசனை செய்ததாகவும் இதையடுத்து சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.