ஓலா நிறுவன பணியாளர்கள் நீக்கமா?

Filed under: இந்தியா,தமிழகம் |

ஓலா நிறுவனம் அதில் பணிபுரியும் ஊழியர்கள் 500 பேரை வேலைநீக்கம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓலாவின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து செலவுகளை குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து 400 முதல் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் அந்தந்த பிரிவின் மேனேஜர்களிடம் சரியாக செயல்படாத ஊழியர்களின் லிஸ்ட்டையும் கணக்கெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓலா நிறுவனம் மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அந்நிறுவனத்திற்கு 5000 புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.