கஞ்சாவை தின்ற எலிகளால் இருவர் விடுதலை!

Filed under: சென்னை |

எலிகள் சாப்பிட்ட 11 கிலோ கஞ்சாவால், அதை கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நபர்கள் 22 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டது. மீதி 11 கிலோ கஞ்சா மட்டும்தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து வழக்கில் குற்றம் காட்டப்பட்ட இருவரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதால் கஞ்சா கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.