கடலூர் டி.எஸ்.பி சாந்தி உதவி செய்ததின் பின்னணி என்ன ?

Filed under: தமிழகம் |

கடலூர்: கடந்த இரண்டு நாட்களாக சமூக வலை தளங்களில் கடலூர் நகர துணை கண்காணிப்பாளர் சாந்தியை பற்றி வைரலாக ஒரு தகவல் பரவிய வண்ணம் உள்ளது. அந்த தகவல் என்னவென்றால், கொரானா பாதுகாப்பு பணியில் இருக்கும் சுமார் 500 காவலர்களுக்கு தனது சொந்த செலவில் வீட்டிற்கு தேவையான காய் கறிகளை வாங்கி கொடுத்து, அனைத்து காவலர்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்து விட்டார் என்ற செய்தி தான்.

இதில் கவனிக்கப்பட விசயம் என்னவென்றால், இந்த செய்தியை கடலூர் நகர உண்மையான காவலர்களே விரும்பவில்லை என்பது தான், காரணம் இவர் தனக்கு கீழ் பணிபுரியும் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை யாரையும் மரியாதையாக நடத்தவே மாட்டாராம். சில காவலர்களை வாடா போடா என்று தான் கூப்பிடுவாராம். சக அதிகாரிகள் என்றால் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தான் பதில் சொல்வாராம். கடலூரில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுவதற்கு காரணமே இந்த டீ.ஸ்.பி சாந்தி தானாம், லஞ்ச வாங்குவதிலும் இவரை மிஞ்ச ஆளே இல்லை என்கிறார்கள். இதனால் கொந்தளித்து போன சமூக ஆர்வலர்கள் சிலர் இந்த டீ.ஸ்.பி சாந்தியைப் பற்றி புகார் கணைகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். அதன் பெயரில் கடந்த நவம்பர் மாதம் அதிரடியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு டம்மி பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடலூர் டி.எஸ்.பியாக, ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார். ஆர்டர் வந்த மறுநாளே கடலூர் எஸ்.பி ஆபீசுக்கு பதவியேற்க வந்துவிட்டார் ஸ்ரீகாந்த். அங்கே எஸ்,பி யை சந்திக்க சாந்தியும் காத்திருந்தார். எஸ்.பி அபினவ் ‘’சி.எம் புரோக்ராம் இருக்கிறது அதனால் இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று சொல்லி  ஸ்ரீகாந்தை அனுப்பி விட்டாராம் .

இந்த இரண்டு நாள் கேப்பில் மாவட்ட அமைச்சர் பிடித்து கடலூர் எனக்கு பிடித்து விட்டது இந்த ஊரை விட்டு என்னை மாற்ற வேண்டாம் என்று விடாப்பிடியாக கெஞ்ச அமைச்சர் டிஜிபியை தொடர்பு கொண்டு சாந்திக்காக பரிந்துரை செய்தாராம். மேலும் சில கரப்சன் போலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் சாந்திக்கு உதவி பண்ண, அப்புறம் என்ன கடலூர் டி.எஸ்பி யாக பொறுப்பேற்க வந்த ஸ்ரீகாந்த், திருச்சிக்கு இடம் மாற்ற செய்யப்பட மறுபடியும் கடலூர் டி.எஸ்.பி யாக பொறுப்பேற்றாராம் சாந்தி. இவர் கடலூரில் இப்பொழுது இருக்கிறவரை அனைத்து சட்ட விரோத செயல்களும் தங்கு தடையில்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறதாம். இன்னும் கொஞ்ச நாள் தொடர்ந்தால் கடலூர் நகரம் மிக மோசமான நிலைக்கு சென்று விடும் என்கிறார்கள். அதனால் தான் தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காகத்தான் காவலர்களுக்கு 500 பேருக்கு கொரானா உதவி கொடுப்பது போல் நாடகத்தை நடத்தி அதை வெற்றிகரமாக பரப்பியும் விட்டாராம்.

சாந்தியின் நாடகம் காவலர்களுக்கும் கடலூர் நகர மக்களுக்கும்  தெரிந்தாலும், மற்ற மாவட்ட மக்களுக்கு தெரியாது என்பது தான் கொடுமையான விசயம். அதை நாம் தெரியப்படுத்தி விட்டோம் !