நாகை எம்.பி செல்வராசு கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

நாகையில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராசுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதைப்போலவே மக்களுக்கு சேவை செய்யும் எம்.எல்.ஏக்-கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர்.

தற்போது நாகை மாவட்டம் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.