கணக்கில் வராத ரூ.200 கோடி!

Filed under: சினிமா |

கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். இது திரையுலகத்தினரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அன்புசெழியன் உள்ளிட்ட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியானது. இச்சோதனையில் குறித்து, வருமான வரிசோதனை வெளியிட்ட அறிக்கையில், வருமான வரிச்சோதனையில், கணக்கில் வராத ரூ. 200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பணமாக ரு.36 கோடியும், தங்கம் வெள்ளி உள்ளிட்டவை ரூ.3 கோடி மதிப்பிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் அன்புச் செழியனுக்குச் சொந்தமாக இடங்கள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களிலிருந்து தியேட்டர் வருமானத்தைக் குறைத்து, பல கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும், பல நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், பத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், லோகேஷ் இயக்கிய “விக்ரம்“ படத்திற்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்துள்ளார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டது.