கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெற்றோர்கள் !

Filed under: அரசியல்,தமிழகம் |

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்காக ஆணையைப் பெற்ற மாணவியின் தந்தை முதலமைச்சருக்குக் காலில் விழுந்து நன்றி தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றி அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேர், 7.5 சதவீதம் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான இடங்களுக்கு தேர்வாகியுள்ளார். அவர்களில் 18 மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ படிப்பிற்கான ஆணையை இன்று நேரில் வழங்கினார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அதற்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முதலமைச்சருக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

அதில், மாணவி ஒருவரின் தந்தை பேசுகையில் “என் மகள் பிறந்த நாளிலிருந்து அவளை மருத்துவராக்கா வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால், குடும்பச் சூழல் காரணமாக அவளை அரசுப் பள்ளியில் தான் படிக்க வைக்க முடிந்தது. ஒவ்வொரு நாளும் என் மகள் எப்படி மருத்துவராக்கப் போகிறேன் என்று நினைத்து வருந்தியிருக்கிறேன். முதல்வர் ஐயா அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது மூலம் என் மகளுக்கு மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்தது. என் அப்பா, தாத்தா படிக்காதவர்கள். இப்போது என் மகள் மருத்துவராகிறாள்.” என்று கூறி முதலமைச்சரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.