கமலஹாசனின் ஆதரவை கோரும் ஈவிகேஎஸ்!

Filed under: அரசியல்,தமிழகம் |

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஈவிகேஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் செய்தியாளர்களிடம், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் பிரச்சாரத்திற்கு வருவார். கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரை நேரில் சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுள்ளேன்” என்று ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமீபத்தில் கமலஹாசன் ராகுல் காந்தியை சந்தித்துள்ள நிலையில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் ஆதரவளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.