இன்று ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி அதாவது இன்று கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவகாசத்தை நீட்டி தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு தமிழ் ஆங்கிலம் ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது.
Related posts:
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து அமைச்சர் மனோதங்கராஜ்
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,995 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்ததாக 5 நபர்களின் பெயர்களைக் குறி...



