ஹெச் வினோத் அஜீத்தின் கூட்டணியில் “துணிவு” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது.
படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கமல் “இந்தியன் 2” திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது. படத்துக்காக வெறும் 35 நாட்கள் மட்டுமே கமல்ஹாசன் தேதிகள் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்த இயக்குனர் வினோத், திரைக்கதையை விவரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கமல், “இந்தியன் 2” படத்தை முடித்துவிட்டு அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், அங்கிருந்து திரும்பியதும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.