கர்நாடக முன்னாள் முதல்வர் ஆவேசம்!

Filed under: இந்தியா |

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து இந்து கோவில்கள் அருகே இஸ்லாமிய கடைகள் செயல்பட தடை விதிப்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பல பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா “நான் ஒரு இந்து, இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை மாட்டுக்கறி உண்ணக்கூடாது என சொல்ல நீங்கள் யார்? ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் மாட்டுக்கறியை உண்பதில்லை. இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட உண்கிறார்கள்” என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.