கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரால் சகாக்கள் 3 பேர் சுட்டுக் கொலை !

Filed under: தமிழகம் |

kalpakkam_1_2143544fகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று அதிகாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சக வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பாதுகாவலர்கள் இன்று அதிகாலை 5.15 மணியளவில் வழக்கமான அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டனர். அப்போது விஜய் பிரதாப் சிங் என்ற தலைமைக் காவலர் திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில், கணேசன் – கூடுதல் துணை ஆய்வாளர், சுப்புராஜ் – தலைமைக் காவலர், மோகன் சிங் – தலைமைக் காவலர், ஆகிய 3 வீரர்கள் பலியாகினர். இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரதாப் சிங், கோவர்த்தன் சிங் ஆகிய இருவரும் கேளம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட விஜய் பிரதாப் சிங் (40) கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து கல்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.