ரெய்னாவின் மாமா கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது!

Filed under: இந்தியா |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுரேஷ் ரெய்னாவின் அத்தை வீட்டில் கொள்ளையடித்து மற்றும் அவரின் மாமாவை கொலை செய்த வழக்கில் மூன்று பேரை பஞ்சாப் காவல்துறை கைது செய்து உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ரெய்னாவின் அத்தை குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் மர்ம கும்பல் கொள்ளை அடிக்க வந்த போது ரெய்னாவின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ரெய்னாவின் மாமாவை உயிரிழந்தார்.

அதை பற்றி விசாரணை வேண்டும் என ரெய்னா தெரிவித்து இருந்தார். பின்பு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்ததாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்திருந்தார்.

அதன் படி விசாரணை செய்த வந்த காவல்துறை, தற்போது மூன்று குற்றவாளிகளை கைது கைது செய்து உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பின்னர் 11 பேரை தேடி வருவதாக பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.