கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பதிவாளர் கைது!

Filed under: தமிழகம் |

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு பதிவாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவிக்கு பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளரான கோபியால் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சேலம் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.