கல்லூரி மாணவி வீடியோ எடுத்த இளைஞர் கைது!

Filed under: சென்னை |

போலீசார் சென்னையில் கல்லூரி மாணவி குளிக்கும் போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ராயபுரம் பகுதியில் கல்லூரி மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி உடனடியாக தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூற, அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை அடுத்து போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்ட போது அவரது பெயர் விக்னேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அப்பெண்ணின் வீட்டிற்கு கீழ் தளத்தில் தான் வசித்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கீழ் வீட்டில் உள்ள ஒருவரே கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.