கள்ளப்படம்

Filed under: Uncategory,சினிமா |

IMG_6512 2 (1)இசை அமைப்பாளர் கே , இசை உலகில் தனக்கு கிடைத்த நற்பெயரை தொடர்ந்து நடிகனாக , இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக  பணியாற்றிய ஜே . வடிவேல் இயக்கத்தில்  , இறைவன் films சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும்  ‘கள்ளப்படம் ‘ என்ற  படத்தில் அறிமுகமாகிறார். நான்கு இளைஞர்களையும் , திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர் பார்த்து நிற்கும் அவர்களின்  எதிர் கால கனவுகளையும் பற்றிய படம் இது .அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே . வடிவேலுவுடன் , இசை அமைப்பாளர் கே , மற்றும் இந்த படத்தின் ஒளிபதிவாளரும் , படதொகுப்பாளரும் நடிகர்களாக அறிமுகம் ஆகின்றனர் . படத்தின் பிரதான தொழில் நுட்ப கலைஞர்கள் படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாக நடித்து இருப்பது இதுவே முதல் தடவை ஆகும் .

கதாநாயகியாக நடிப்பவர் லக்ஷ்மி ப்ரியா , இவரது கதாபாத்திரத்தை சுற்றிதான் படத்தின் பிரதான பாத்திரங்களும் அமைய பெற்றுள்ளது .
‘ கள்ளப்படம் ‘ திரை பட பாடல்களில் முக்கிய அம்சமாக இருக்கும் இருப்பது பெண்களுக்காக மட்டுமே , என்ற வகையில் கே இசை அமைத்து இருக்கும் பாடலாகும் . ‘கும்கி’ புகழ் மகிழினி குரலில் சர்வதேச மகளிர்  தினமான மார்ச் 8ஆம் தேதி  ஒலிபதிவு செய்யப்பட்டது.பெண்களை கௌரவிக்கும் இந்த பாடலின் ஆசியோ என்னவோ , தயாரிபாளர்களின்  சீரிய முயற்சியால் அடுத்த கட்ட இசை அமைப்பு பணியை ஆஸ்திரேலியாவில் தொடர உள்ளனர் . முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இசை பதிவு செய்யும் இந்திய இசை அமைப்பாளர் என்பதால்  இசை அமைப்பாளர் கே  வின் நடையிலும் கங்காரூவின் துள்ளல் தெரிகிறது, அது இசையிலும் வெளிப்படும் என்பது உறுதி. இசைக்கு பிராந்தியம் இல்லை என்பர் , இப்போது இசை அமைப்புக்கும் தான் .