கவிஞர் வைரமுத்துவின் டுவிட்டர் கேள்வி!

Filed under: அரசியல்,தமிழகம் |

கவிஞர் வைரமுத்து தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்?- என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு, இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததோடு மட்டுமல்லாமல், ஐ.நா சபையின் அலுவல மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11வது அறிக்கையை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ளது. அவ்வறிக்கையில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தைவிட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. இதற்கு, இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தினால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்திருந்தார்.

தற்போது கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்,
எங்களை ஆண்ட
இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ
தங்கள் தாய் மொழியை
எங்கள் தலையில் திணித்ததில்லை
தமிழ்நாட்டைத்
தமிழர்கள் ஆளும்பொழுதே
இந்தியைத் திணிப்பது
என்ன நியாயம்?
அதிகாரமிக்கவர்களே
அன்போடு சொல்கிறேன்
புலியைத்
தொட்டாலும் தொடுக
மொழியைத்
தொடாது விடுக என பதிவிட்டுள்ளார்.