நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரண நிதி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் இருக்கும் என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர் காயமடைந்த 17 பேர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதை பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில்: அனல் மின் விபத்தில் பலியான 6 நபர்களின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் 17 பேர் காயமடைந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய், பலத்த காயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்த குடும்பத்துக்கு 50 ஆயிரமும் நிவாரண நிதி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.