தமிழ் கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உயிரிழந்தார்!

Filed under: தமிழகம் |

தமிழில் புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் கவிஞர் பாரதிதாசன். இவருடைய மகன் மன்னர் மன்னன் அவருடைய 92வது வயதில் இன்று உயிரிழந்தார்.

புதுச்சேரியில் உள்ள மன்னர் மன்னன் ஒரு தமிழறிஞர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய வரலாற்றை எழுதியவர். தமிழ்மொழியில் பெருமை மிக்க பல நூல்களை எழுதியவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரராவார்.

இவருடைய பொண்ணான சேவையைப் பாராட்டி தமிழக அரசு திருவிக விருது, கலைமாமணி விருது போன்ற விருதுகளை கொடுத்துள்ளது. வயது மூப்பின் காரணத்தினால் இன்று உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு நாளை மாலை நடைபெற உள்ளது.