காங்கிரஸுக்கு கமல் ஆதரவு!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கமல்ஹாசனின் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.எஸ்.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். சென்னையின் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்பாக வாசிக்கப்பட்ட அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் மறுமலர்ச்சி தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஃபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பாக போட்டியிடும் எனது நண்பரும் பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிப்பது எனும் முடிவை மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஆமோதித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றிபெறச் செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு முடிவெடுக்கும் தேர்தல் நாளில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை பதிவுசெய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் பங்குபெற வேண்டும். தமிழ்நாடு சமத்துவத்தின், சகோதரத்துவத்தின், சமூக நீதியின் மண் என்பதை மீண்டும் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்கச் செய்வோம்” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.