காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் எம்பி ஆக இருந்தால் வயநாடு தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி தகுதியிழப்பு ஜனநாயக படுகொலைக்கு சமமானது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டு உள்ளோம் என்றும் பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறி உள்ளது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.