டிடிவி தினகரன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்திருப்பது பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விவேகானந்தா சேவாலய விடுதி திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகளின் விடுதியான இதில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.