விஜய் வசந்த் நாயகனாக நடிக்க அவரின் தம்பி வினோத் வசந்த் தயாரிக்கும் படம் என்னமோ நடக்குது. இதற்கு இசை அமைத்தவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் காமெடி நடிகனாகிட்டேன். எனக்கு இசை தெரியாது. முறையாகப் படிக்கவில்லை. யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும்போது உடனிருந்து கவனிப்பேன். பெரியப்பா இளையராஜாவின் மெட்டுக்களைக் காப்பியடித்தே நான் இசையமைத்தேன் என்றார் பிரேம்ஜி.
சினிமா படிப்பை வெளிநாடு போய் படித்தேன். டைரக்டர் ஆவதே என் விருப்பம். அண்ணன் நடிகனாயிட்டான். நான் புரொட்யூசராயிட்டேன். சினிமாவில் எல்லா விஷயங்களையும் அனுபவப்பூர்வமாக கத்துகிட்டிருக்கேன். தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் படவிழா, நடத்த திட்டம் என்றார் வினோத் வசந்த். படத்தில் அரசியல்வாதிகள் மீது வசைபாடப்பட்டிருப்பதாக தகவல்.