தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கிளப்பிய கேள்விக்கு அமைச்சர் பியூஷ் கோயல் எழுதியுள்ள பதிலில்; ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கிய ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை.

மாநில அரசுகள் மற்றும் அங்கீகரித்த பிரதிநிதிகளிடம் இருந்து தான் கட்டணம் வசூலிக்கபட்டது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டு நிறைவடையும் வரை ரயில்வேயில் புதிய வேலைகள் ஆரம்பிக்கப்படாது. மேலும், புதிய பாதை அமைப்பது, மாற்று பாதை வேலைகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.