காயமடைந்தவருக்கு உதவிய முதல்வர்!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் விழுந்து காயமடைந்தவருக்கு உதவியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் விழுந்து ஒரு நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டதை கண்டு கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையமருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது.

இதைக் கண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தமது கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.