காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலி!

Filed under: தமிழகம் |

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் நிசாந்த், நிதிஷா கபிசாந்த் என்ற மூன்று குழந்தைகளும் விளையாடிக் சென்றுள்ளனர்.

வெகுநேரம் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் பெற்றோர்கள் எல்லா இடத்திலும் தேடியுள்ளனர். அப்போது நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத கார் ஒன்று நிற்கவே அதில் தேடியுள்ளனர். காருக்குள் ஏறி விளையாடிய குழந்தைகள் அக்காரில் மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

நீண்ட நாளாக பயன்படுத்தப்படாத காருக்குள் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.