கிட்னி ஸ்டோனை தவிர்க்க 5 டிப்ஸ் !

Filed under: Uncategory |

கிட்னி ஸ்டோனை தவிர்க்க 5 டிப்ஸ் !

உணவு பழக்கம், மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக கிட்னி ஸ்டோன் என்று சொல்லப்படும் சிறுநீரக கல் பலரையும் தாக்கி விடுகிறது. உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களும் கிட்னி ஸ்டோன் உண்டாக ஒரு பெரிய காரணமாக உள்ளது. சிறுநீரக கற்களால் இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படுகிறது. அந்த வலியை கடப்பதும் கடினமானதாகவே உள்ளது.

இந்நிலையில் கிட்னி ஸ்டோனிலிருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய இயற்கை வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கால்சியம் : கால்சியம் உணவுகளை அதிகம் உங்கள் உணவில் எடுத்துக்கொள்ளும் போது, சிறுநீரக கற்களை தடுக்க முடியும். கால்சியம் படிகங்கள் வெளியேறாமல் போகும் போது தான்; சிறுநீரக கற்கள் உருவாகின்றன. இருப்பினும் பால், பாலடைக்கட்டி, தயிர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்கலாம். கால்சியம் ஆக்சலேட்டுகள் உறிஞ்சுவதை தடுத்து சிறுநீர் கற்கள் ஏற்படுவதை முற்றுலுமாக தடுக்கிறது.

தண்ணீர் : உடலில் நீர்பற்றாக்குறை ஏற்படும் போது தான் கற்கள் உருவாகின்றன. இதனால் அதிகளவு நீர் அருந்துவது கற்கள் வராமல் தவிர்க்கும். அதிகளவு பழச்சாறு, நீர் போன்றவற்றை அருந்தும் போது, கற்கள் சிறுநீர் பாதை வழியாக வெளியேறி விடும். சோடா, கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மக்னீசியம் : கால்சியம் கற்களை தடுக்கும் மக்னீசியத்தை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். மக்னீசியம் நிறைந்த பருப்பு வகைகள், வெண்ணெய், அவக்கோடா போன்றவை எடுத்துக்கொள்வது கற்களை வரவிடாமல் தடுக்கும்.

உப்பை குறையுங்கள் : உங்கள் உணவில் உப்பு, நொறுக்கு தீனி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுவதை குறைக்கும் போது சிறுநீரக கற்களை தவிர்த்து விடலாம். அதேபோல் ஆட்டிறைச்சியில் பியூரின்கள், யூரிக் போன்றவை அமில கற்களை உண்டாக்குகின்றன. இதனால் ஆட்டிறைச்சி எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

சிட்ரிக் : சிட்ரிக் உணவுகள் சிறுநீரக கற்களை தடுக்கவும், வெளியேற்றவும் சிட்ரிக் உணவுகள் உதவுகின்றன. சிட்ரிக் உணவுகளை உட்கொள்ளும் போது சிறுநீரக பாதையில் இருக்கும் கால்சியம் ஆக்சலேட் கற்களை கரைத்து வெளியேற்றும்சக்தி சிட்ரிக் உணவுகளுக்கு உண்டு . எலுமிச்சை பழம், ஆரஞ்சு, திராட்சை பழங்களை அதிகம் உட்கொள்ளும் போது, சிறுநீரக கற்களை தடுக்கலாம்.