கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்கிறார் ஜெயம் ரவி!

Filed under: சினிமா |

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் “பூலோகம்.” இத்திரைப்படத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.

இவர்கள் இரண்டாம் முறையாக இணையும் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி ஈழத் தமிழராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “ஜனகனமண.” இப்படத்தை அடுத்து, இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு படத்தில் நடிகக்வுள்ளதாகவும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும், அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள ஒரு படத்திலும் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.