குடிபோதையில் ஆசிரியர்; சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

Filed under: இந்தியா |

உத்தரபிரதேசத்தில் பள்ளியில் மது அருந்திக் கொண்டே பாடம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சைலேந்திர சிங் கவுதம் என்பவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே பீர் பாட்டிலை குடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியர் மீது உத்தரபிரதேச காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து ஆசிரியர் சைலேந்தர சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.