குடிப்பழக்கம் குறித்து சூப்பர் ஸ்டாரின் மனந்திறந்த பேச்சு

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம்” என்று கூறியுள்ளார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலரது நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. படத்தில் இடம்பெறும் பாடல்கள் மூன்று சிங்கிலாக ரிலீசானது. நேற்று இப்படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. அதில், இப்படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ரன்னிங் டைம் எனவும், யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. படத்தில் இசை வெளியீட்டு விழா, நேற்று, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், அனிருத், நெல்சன், உள்ளிட்ட பிரபலங்கள் பன்கேற்றனர். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது, “மது அருந்தினால் மூளை சரியாக வேலை செய்யாது. சரியான முடிவு எடுக்க முடியாது. இதனால் குடும்பமும் பாதிக்கும். நான் மது அருந்தியதால் நிறைய இழந்திருக்கிறேன். அனுபவத்தில் கூறுகிறேன் மது அருந்தாதீர்கள். குடிப்பழக்கம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதைவிட எங்கோ இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம்“ என்று கூறியுள்ளார்.